திருச்சி மாநகராட்சியில் கோவிட் தொற்று அதிகளவில் பரவும் கோட்டம்

திருச்சி மாநகராட்சியில் கோவிட் தொற்று அதிகளவில் பரவும் கோட்டம்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 37லிருந்து 45ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 56 பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மாநகராட்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது .மேலும் 700 சத்துணவு பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களிடம் ஆக்சிஜன் அளவு சோதிக்கப்பட்டு அதன் மூலம் 92 பேர் ஆக்சிஜன் குறைவால் நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகர பகுதிகளில் உள்ள நான்கு கோட்டங்களில் கோ.அபிஷேகபுரம் கோட்டம் 29 இடங்கள் கட்டுபடுத்த பகுதிகளாக அதிக அளவு  தொற்று பரவும் கோட்டம். இரண்டாவதாக பொன்மலை கோட்டத்தில் 12 இடங்கள் அடுத்து  அரியமங்கலம் தற்போது தொற்று பரவும் கட்டுபடுத்தபட்ட பகுதிகள் அதிகரித்து வருவதாகவும்
ஸ்ரீரங்கம் கோட்ட பகுதிகளும் கோவிட் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் கோவிட் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் பணியிலும் கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK