திருச்சியில் பறக்கவிடப்பட்ட பச்சை கிளிகள்

திருச்சியில் பறக்கவிடப்பட்ட பச்சை கிளிகள்

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழப்புதூர், குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து பச்சைக்கிளிகள் மற்றும் குருவிகள் வளர்த்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி திடீர் சோதனை நடத்தி, வீடுகளின் முன்பு விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட பச்சை கிளிகள், 100க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தக் குருவிகள் மற்றும் பச்சை கிளிகள் அனைத்தும் வனப்பகுதியில் வளர்வது, எனவே இதுபோன்று வீடுகளில் வளர்ப்பது சட்டவிரோதமாகும். அந்த வகையில் மார்ச் மாதம் மீட்கப்பட்ட பச்சை கிளிகள் அனைத்தும் வனப்பகுதியில் கொண்டு விடப்படும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதன்படி இன்று பறிமுதல் செய்யப்பட்ட 400 பச்சை கிளிகளில் 300 கிளிகள் திருச்சி மாவட்டம் அடர்வனப்பகுதிக்கு வனத்துறையினர் எடுத்து சென்று பறக்கவிட்டனர். மேலும் கிளி குஞ்சுகள் மற்றும் இறக்கை வெட்டப்பட்ட கிளிகள் என 100 கிளிகள் உள்ளன.

அதன் இறக்கை வளர்ந்த பின்னர் இதே போன்று வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO