போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி இன்று 18.08.2022 காலை 10.30 மணிக்கு கண்டொண்மென்ட் காவல் சரக காவல் உதவி ஆணையர் மருத்துவர் M.V.அஜய் தங்கம்  தலைமையில், செவன்த் டே பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன் சேர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி வ.உ.சி சிலை அருகில் இருந்து ஹீபர் ரோடு சாலையின் இருபுறமும் பீமநகர் செவன்த் டே பள்ளி வரை மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போதைப் பொருள்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி மாணவர்களுடன் பொதுமக்களும் போதைப் பொருட்கள் எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO