போலீசாரை வைத்து மிரட்டி கடையை காலி செய்ய சொல்வதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் - வாட்ஸ்ஆப்பில் கதறிய பெண்
திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெரு பகுதியில் வனஜா அக்கா கடை நம்மாழ்வார் இயற்கை உணவகம் என்ற பெயரில் ஒரு சிறிய கடையில் இயற்கை உணவுகளை கோவிட் தொற்று காலத்திலிருந்து நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே திருச்சி காவிரி பாலம், மாம்பழச்சாலை பகுதியில் கடை போட்ட போதும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து கடை போடக்கூடாது என தொந்தரவு கொடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வருக்கு தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.
தற்போது ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் இயற்கை உணவுகளை வைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சிறிய கடையை வாடகை கொடுத்து வைத்துள்ளேன். காவல்துறை தொடர்ந்து தன்னை மிரட்டி கடையை காலி செய்ய சொல்கிறார்கள். பத்திரிக்கையாளர்களிடம் தொடர்ந்து தகவல் கொடுத்தார். இதனால் கடை வாடகை உரிமையாளர் கடையை காலி செய்யுமாறு கூறுகிறார்.
தனது கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளை காப்பாற்ற இந்த சிறிய கடை வைத்து பிழைத்து வருவதாக கண்ணீர் மல்க குறிப்பிடுகிறார். உடனடியாக தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவரின் கோரிக்கையாக உள்ளது.
இவர் இந்த கடையை தற்போது காலி செல்ல சொல்வதற்கு காரணம் இவரின் இயற்கை உணவு விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து காவல்துறையினர் வைத்து கடைக்காரர் மிரட்டி வருவதாகவும் தகவல் தெரிவிக்கிறார். இதற்கு தீர்வு கிடைக்காக விட்டால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று கூறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn