தவறெனில் உடனே திருத்திக் கொள்கிறேன் - திருச்சியில் அமைச்சர் பேச்சு

தவறெனில் உடனே திருத்திக் கொள்கிறேன் - திருச்சியில் அமைச்சர் பேச்சு

திருச்சிராப்பள்ளி கோர்ட்யார்டு ஹோட்டலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (NSNOP) திட்டத்தின் 3-ஆவது மாவட்ட அளவிலான மாநாட்டில் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் தேவைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் சார்பில் 141 கோடிக்கும் மேலான பங்களிப்பு கடிதங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருநிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் வழங்கினார். 

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், பத்மபூஷன் வேணு ஸ்ரீனிவாசன், தலைவர், NSNOP, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) திருச்சி சிவா, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் (ஓய்வு), மேம்பாட்டு ஆணையர் முனைவர் அலெக்ஸ் பால் மேனன், ஆலோசகர் இயக்குனர் (MEPZ SEZ) N.V.பாலச்சந்தர்,

அசோக் லேலண்ட் /பௌன்டேஷன் மற்றும் தலைவர் AL கல்வி ட்ரஸ்ட், பி.செல்ல ராமசாமி, தலைவர், சிஐஐ திருச்சிராப்பள்ளி மண்டலம், ஸ்ரீவத்ஸ் ராம், தலைவர், சிஐஐ, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பெருநிறுவனங்களின் முக்கிய பிரநிதிகள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நம்ம ஊரு நம்ம பள்ளி மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்..... பள்ளிக்கல்வி எனும் போது இந்தியாவிலேயே வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பள்ளிகளில் உட்கட்டமைப்பு, இடைநிற்றல் இல்லா மாநிலம் ஆகியவற்றில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதன்மையாக உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான், அதை மாற்ற முடியாது. பள்ளிக்கல்வித்துறை மீதான விமர்சனம், பாராட்டு இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறோம். தவறெனில் உடனே திருத்திக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் திட்டங்களை மற்ற மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு தங்கள் மாநிலத்தில் செயல்படுத்துவது எங்களுக்கு பெருமைமாக உள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision