நள்ளிரவில் ஒரு பெண் நகை அணிகலன்களை அணிந்து கொண்டு இப்பொழுது சுதந்திரமாக நடமாடுகிறாலோ அப்போது தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக கருதவேண்டும் - டிஐஜி ஆனி விஜயா பேட்டி!
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் வன்முறையில் இருந்து மீள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி சரக காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கொரோனா காலத்தில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து மீள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாத்மா காந்தி சொன்னதுபோல் நள்ளிரவில் பெண்கள் சுதந்திரமாக நடக்கும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறை சார்பில் நடத்தப்படும் என திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு நடந்த விழாவில் தெரிவித்தார்.
திருச்சி சரக மற்றும் மாவட்ட காவல்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தமிழில் தொண்டு நிறுவனம், நவல்பட்டு கிராம குழு மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் சார்பில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொரொனா காலத்தில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாத்துகொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.நவல்பட்டு கிராம தலைவர் செல்வராஜ், செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் பாரதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.
குழந்தைகள் தற்போது டிவி, இன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் ஆகிவற்றில் மூழ்கிவிடுகின்றனர். என்றும் அவர்கள் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவது இல்லை எனவும் தெரிவித்ததோடு இந்த விழாவில் கலந்து கொண்ட சிறுவன் சிறுமிகளை அழைத்து தாங்கள் என்னென்ன விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள் என்றும் மேலும் பாரம்பரிய விளையாட்டுகளான பாண்டி, சிப்பின் கயிறு, பல்லாங்குழி, கோகோ, கண்ணாமூச்சி குறித்த பல்வேறு விளையாட்டுகள் குறித்தும் கேட்டதோடு அந்த குழந்தைகள் சாப்பிடும் உணவு வகைகள் பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் முன்பு பெண்கள் வீட்டில் இருந்தபடியே அம்மி அறைப்பது, மாவு ஆட்டுவது, தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகள் மூலம் பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வந்தனர்.
ஆனால் தற்பொழுது கிரைண்டர், மிக்சி, போன்று இயந்திரமயமான ஆனால் அது போன்ற உடற்பயிற்சிகள் பெண்கருக்கு கிடைக்காமல் முடியாமல் போகின்றன என்றும் இது போல் இயற்கையாக உள்ள இதை நாம் செய்யமல் தற்போது ஜிம், வாக்கிங் இதுபோன்று பயிற்சிகள் செய்து உடலையும் உடல்நலத்தையும் பேன வேண்டி உள்ளது என்று கூறினார்.
மேலும் இயற்கையை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்றும் நானும் நேசிக்கிறேன் என்றும் கூறியதோடு இளைய தலைமுறைகள் நல்ல வழியில் நடக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனி விஜயா
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு குறித்தும் மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் தற்போது இங்கு நடைபெறுவதாகவும் மேலும் இந்த கொரொனா காலகட்டத்தில் இது போன்ற வன்முறைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து புகார் கொடுக்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தியதாக கூறினார்.
மேலும் இது போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் மகாத்மா காந்தி நள்ளிரவில் ஒரு பெண் நகை அணிகலன்களை அணிந்து கொண்டு இப்பொழுது சுதந்திரமாக நடமாடுகிறாலோ அப்போது தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக கருதவேண்டும் என்று கூறினார் என்றும் அது நினைவாகும் வரை இது போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடந்த வன்னம்தான் இருக்கு என்றும் கூறினார்.
இந்த விழாவில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜிம், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, பெல் இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் மற்றும் பொதுமக்களும் சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்டனர்.