திருச்சியில் மின்சார கம்பிகள் உரசியதில் 4 ஏக்கர் கரும்பு தீயில் கருகியது

திருச்சியில் மின்சார கம்பிகள் உரசியதில் 4 ஏக்கர் கரும்பு தீயில் கருகியது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நரிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ். விவசாயியான இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் நாட்டு கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் கரும்பு சாகுபடி செய்திருந்த வயலுக்கு மேல் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் உயர் மின்னழுத்தம் கொண்ட இரண்டு மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட தீப்பொறியானது கரும்பு வயலுக்குள் விழுந்தது.

இதனால் ஏற்பட்ட தீயானது கரும்பு வயல் முழுவதும் மளமளவென பரவி 4 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் கரும்பு தீயில் கருகி சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தியதால் எஞ்சிய 2 ஏக்கர் கரும்பு தப்பியது. 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே கரும்பு தோட்டத்தில் மின் கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது அப்போது கரும்பு விவசாயி ஸ்டீபன் ராஜ் மின்வாரிய அதிகாரிகளிடம் எங்கள் பகுதியில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது. இதனை விரைவில் இழுத்து கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப் போக்குதான் இந்த தீ விபத்திற்கு காரணம் என ஸ்டீபன் குற்றச்சாட்டியுள்ளார். இதற்கு மாவட்ட நிர்வாகம் மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn