கொளுத்தும் வெயிலில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் - அடிப்படை வசதிகளின்றி தவிப்பு

கொளுத்தும் வெயிலில்  நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் - அடிப்படை வசதிகளின்றி தவிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று 13 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில், தொட்டியம் கொங்குநாடு கல்லூரி மையத்தில், 1,008 மாணவ, மாணவிகளும், பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி, அம்மாபேட்டை ஜெஜெ பொறியியல் கல்லூரி மையங்களில் தலா, 912 மாணவர்களும், புத்தூர் காவேரி குளோபல் பள்ளி தேர்வு மையத்தில், 888 பேரும், தோளூர்பட்டி கொங்கு நாடு பாலிடெக்னிக் கல்லூரியில், 720 பேரும் துடையூர் மகாலட்சுமி பொறியியல் கல்லூரி, திருச்சி கமலா நிகேதன் பள்ளி, இருங்களூர் எஸ்ஆர்எம் டிஆர்பி கல்லூரி மையங்களில் தலா, 600 பேரும், மணிகண்டம் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில், 480 பேரும்,

கேகே நகர் எஸ்பிஐஓஎ பள்ளி, ஹெச்ஏபிபி கேந்திர வித்யாலயா, பெல் டவுன்ஷிப் ஆர்எஸ்கே பள்ளி ஆகிய தேர்வு மையங்களில், தலா, 432 பேரும், காஜாநகர் சமது மேல்நிலைப்பள்ளியில், 554 பேர்கள் என மொத்தம், 13 மையங்களில், 8,570 மாணவ, மாணவிகள் இன்று நீட் தேர்வை எழுத உள்ளனர்.

இன்று பிற்பகல், 2 மணிக்கு துவங்குகின்ற நீட் தேர்வு மாலை, 5.20 மணி வரை நடைபெற உள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட மாணவர்களும் பெற்றோர்களும் காலை 9 மணி முதல் தேர்வு மையங்களை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

தேர்வு மையத்திற்குள் முதலில் சென்ற மாணவர்கள் மத்திய உணவை சாப்பிடாமல், பசியோடு தேர்வை எழுதவேண்டிய நிலையில் உள்ளனர்.

மாணவர்கள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, கையில் அணிந்திருந்த கடிகாரம், அதுபோல மாணவிகள் அணிந்திருந்த சால் உள்ளிட்டவற்றை தேர்வு மையத்திற்கு வெளியே வெயிலில் காத்துக் கிடக்கும் தங்களது பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றனர்.

குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படவில்லை. அந்த மாவட்டத்தில் பயின்ற மாணவர்கள் அனைவரும் அரியலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று தேர்வு எழுதுகின்றனர்.

அந்த மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் நெடுஞ்சாலை ஓரமாக வெயிலில் காத்துக் கிடக்கின்றனர். 108 டிகிரி வெயில் அடிக்கும் கந்தக பூமி யான திருச்சியில், குடிநீர் இல்லாமல், சிறுநீர் கழிக்க இட வசதி இல்லாமல், நிழல் கூடை இல்லாமல் வெயிலில் காத்துக் கிடப்பதாக பெற்றோர் கள் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision