திருச்சியில் 20வது மியாவாக்கி அடர்வன காடு -ஆட்சியர் மரக்கன்று நட்டு துவக்கம்

திருச்சியில் 20வது மியாவாக்கி அடர்வன காடு -ஆட்சியர் மரக்கன்று நட்டு துவக்கம்

திருச்சியில் மியாவாக்கி அடர்வன காடுகள் உருவாக்க தன்னார்வ அமைப்புகளும் மாவட்ட நிர்வாகமும் முடிவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சிறுகனூர் பகுதியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் 15ஆயிரம் மரங்களை உருவாக்கி அடர்வான காடுகளாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இன்று(28.03.2023) முதல் மரக்கன்றை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் நட்டு அடர்வன குறுங்காடு திட்டத்தினை துவக்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட மர வகைகள் இதில் கன்றுகளாக நடப்பட்டுள்ளன. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களை வைத்து மரக்கன்றுகளை பராமரித்து அடர்வனக்காடுகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 திருச்சி மாவட்டத்தில் இதுவரை 20 அடர்வன குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடர்வன குறுங்காடுகள் அதிக அளவில் உருவாக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திருச்சி மற்றும் ரோட்டரி கிளப் சென்னை லெஜெண்ட்ஸ் நிதி உதவிகளை செய்தனர்.நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிக்குமார், வருவாய் கோட்டாட்சியர்  வைத்தியநாதன், திருச்சி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளர் ரூபன் ஜோசப்,தி  ஈசிஎம் பவுண்டேஷன் நிறுவனர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn