திருச்சி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்
திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வினோத் ஐ கேர் ஹாஸ்பிடல் நிறுவனரும், கண் மருத்துவருமான வினோத் அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் சமூக ஆர்வலரும், ஷைன் திருச்சி நிறுவனருமான மனோஜ் தர்மர் கலந்துகொண்டு சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி மாணவ - மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளில், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளி ஆசிரியை உமா வரவேற்புரையாற்றினார். ஆசிரியை சரண்யா நன்றியுரை கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் உஷாராணி, சகாயராணி, மேரி செரோபியா, பப்பிஸ்டா பாத்திமா, ஜெயந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision