திருச்சியில் இரண்டாவது ஆண்டாக 20 நிமிடத்தில் முடிந்த சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் இரண்டாவது ஆண்டாக 20 நிமிடத்தில் முடிந்த சுதந்திர தின விழா கொண்டாட்டம்

75வது சுதந்திர தின விழா திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் எளிமையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தேசிய கொடியினை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை பறக்க விட்டார்.

இதனைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனையடுத்து 25 ஆண்டுகள் மாசற்று சிறப்பாக பணியாற்றி வரும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி பணியாளர்கள் , காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட 323 பேரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிவராசு சான்றிதழ் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகளே இல்லாமல் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், தனிமனித இடைவெளியில் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா காலகட்டம் என்பதால் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நிகழ்ச்சிகள் அனைத்தும் 20 நிமிடத்தில் முடிந்து விட்ட பிறகு
மாவட்ட ஆட்சியர், மத்திய மண்டல காவல்துறை தலைவர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn