விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கல்வி கற்ற10000 மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கு  சர்வதேச சான்றிதழ்

விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கல்வி கற்ற10000 மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கு  சர்வதேச சான்றிதழ்

இன்றைய உலகம் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நடந்து கொண்டே இருக்கிறது தினந்தோறும் புதியதாய் ஒன்றை உருவாக்கி கொண்டுதான் இருக்கின்றார்கள் அவர்களுடைய கண்டுபிடிப்பும் வியக்கத்தக்க வகையில்   இருக்கிறது.அந்த வகையில் தமிழகத்தில் உள்ள  மாணவர்களுக்கும் விண்வெளி குறித்த கல்வி  சென்று சேர  வேண்டும் என்று திருச்சி  Propeller technologies நிறுவனம்  ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிறுவனத்தின்  இணையதளமான Propel.study  என்ற இணைய தளம் மூலம் தமிழகத்தில் உள்ள 250 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 12000 க்கும்  மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில்  விண்வெளி குறித்த(Space technology ) கல்வியை கற்று உள்ளனர்.கற்றதோடு மட்டுமின்றி அது குறித்த பயிற்சியும் பெற்று தேர்வு எழுதி  12,000 பேர்  சர்வதேச அளவில் சான்றிதழ் Stem.org மூலம் பெற்றுள்ளனர்.

இது குறித்து நிறுவனத்தின் நிறுவனர்  ஆஷிக் ரஹ்மான்   பகிர்ந்து கொள்கையில், இளம் விஞ்ஞானிகளையும் ,இளம் கண்டுபிடிப்பாளர்களையும் மேலும்  மேலும்  உருவாக்க வேண்டும் என்பதே  நிறுவனத்தின் முதல் நோக்கம். தமிழகத்தில் உள்ள 250 க்கும் மேற்பட்ட பள்ளிகளோடு   இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி அளித்துள்ளோம்.

 புது கண்டுபிடிப்பாளர்கள்   இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில்  அவர்களின் ஆர்வத்தை செயலாக்கம்  செய்திட  பயிற்சியை நாங்கள் அளித்து அவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து   வருகிறோம்.

 அதனுடைய அடுத்த முயற்சியாக தான் Space technology குறித்த  பயிற்சி அளிக்க தொடங்கினோம் மாணவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் எங்களை வியப்புக்குள்ளாக்கியது இதுவரை 12 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள்  பயிற்சிபெற்று  வருகின்றனர் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn