திருச்சியில் மெட்ரோ ரயில் மற்றும் காவிரி பாலம் திறக்கப்படும் தேதி குறித்து அமைச்சர் நேரு பேட்டி
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் டாக்கர் ரோடு பகுதியில் 10வது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
பின்னர் பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் 19 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார். காலை முதலே வாக்காளர்கள் அதிகமாக கை சின்னத்துக்கு வாக்களிப்பதை காண முடிகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் வைக்கப்படும் மை அழிக்கப்படுவதாக அதிமுகவின் புகார் கூறிய வருவது தோல்வி பயத்தில் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்றார். திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்திய கூறுகள் ஆய்வு தொடங்க உள்ளதால் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி வைத்துள்ளோம்.
திருச்சி காவிரி பாலம் மூன்று நாட்களில் திறக்கப்படும். கோடையில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதியில் குடிநீர் திட்டங்கள் முழுமை பெற்றுள்ளன என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn