மாநில அரசு தான் நிதியை செலவு செய்கிறது - அமைச்சர் நேரு திருச்சியில் பேட்டி

மாநில அரசு தான் நிதியை செலவு செய்கிறது - அமைச்சர் நேரு திருச்சியில் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் விண்ணப்பம் செய்திருந்த வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு.... பஞ்சபூர் பேருந்து முனையம் பணிகள் முழுமையாக முடிந்தால் தான் திறக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று பல்வேறு திட்டப் பணிகள் வேகமாக துவங்குவது என்பது மீதம் இருக்கும் பணிகள் தான் இன்று துவங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக துவங்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது. கமலஹாசனுக்கு மக்களவைத் தொகுதி கொடுத்திருப்பது குறித்து...... முதல்வர் எது செய்தாலும் சரியாக தான் செய்வார். யாரும் விமர்சனம் செய்யவில்லை என்றார். தொகுதி பங்கீடு அறிவித்தவுடன் தான் வேட்பாளர் அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் யார் எங்கு போட்டியிடுவார்கள் என அறிவிக்க முடியும்.

வீடு கட்டும் திட்டத்திற்கு இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு மத்திய அரசு கொடுப்பது 80 ஆயிரம் தான். மீதம் மாநில அரசு தான் கொடுக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் 30 சதவீதம் தான் மத்திய அரசாங்கம் நிதி கொடுக்கிறது. மீதம் மாநில அரசு தான் கொடுக்கிறது என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision