திருச்சி கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு விழா- 450 காளைகள் பங்கேற்பு

திருச்சி கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு விழா- 450 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 5 வது ஆண்டாக  நடைபெறும்  ஜல்லிக்கட்டு விழாவை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்.விழாவில் 450 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு  விழாவினை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க, ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர். ஜல்லிக்கட்டு்விழா காலை 8.55 மணிக்கு தொடங்கி, மதியம்  4 மணி வரை நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 450 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

சிறந்த காளைகளுக்கும., மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பிரிட்ஜ், பீரோ, டேபிள், சைக்கிள், மின்விசிறி போன்ற ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை விழாக்குழுத் தலைவரும் கல்லக்குடி திமுக நகர செயலாளரும், கல்லக்குடி பேரூராட்சி தலைவருமான பால்துரை உள்ளிட்டோர் வழங்கினர்.

காளைகளை அடக்கிய  10 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது . காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு விழாவிற்கு லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையிலான 10 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்ஐக்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO