விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை - நாளை முதல்வர் திறந்து வைக்கிறார்.

விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை - நாளை முதல்வர் திறந்து வைக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் குளம் பட்டமரத்தான் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். விராலிமலை ஜல்லிக்கட்டு உலக அளவில் சாதனை புரிந்து, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்ததுள்ளது.

Advertisement

அந்த வகையில் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு சிலையை தொடர்ந்து தற்போது வீரமிகு விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற தத்ரூபமான காட்சியை அப்படியே வெண்கல சிலையாக இதனை வடிவமைத்துள்ளனர்.

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று பார்வையிட்டனர்.

Advertisement

நாளை 22ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைக்க உள்ளார்.