ஜெயலலிதா பிறந்தநாள் - அதிமுக சார்பில் மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாள் - அதிமுக சார்பில் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கும், அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா  திருஉருவப்படத்திற்கும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், தொழிலாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision