திருச்சி அருகே விரட்டியடிக்கப்பட்ட ஜோதிமணி

திருச்சி அருகே விரட்டியடிக்கப்பட்ட ஜோதிமணி

நாடு முழுவதும், ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்த நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், தீவிரமாக வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, மிகத்தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டில் தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி பொதுமக்கள் அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் ஜோதி மணி விரட்டி அடிக்கப்படுகிறார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தெற்கு ஒன்றியம் அடைக்கம்பட்டியில் ஓட்டு கேட்டு வந்த கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை சங்கு சத்தம் ஓலி எழுப்பி விரட்டி அடித்தனர். காரை விட்டு இறங்கி வந்து தெருவில் ஓட்டு கேட்க வந்த பொழுது பொதுமக்கள் இளைஞர்கள் ஒலி எழுப்பி அவரை வாக்கு கேட்க விடாமல் விரட்டி அனுப்பினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision