திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கே.என் நேரு பிரச்சாரம் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கே.என் நேரு பிரச்சாரம் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Advertisement

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் திருச்சி சட்டமன்றத் தொகுதி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் கே‌.என் நேரு. திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், திமுக தலைமை கழக முதன்மை செயலாளரும் ஆன கே.என் நேருவிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார். இந்நிலையில் அவருக்கு திமுக சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராப்பட்டி பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றார். மேலும் அங்கிருந்த திமுக அலுவலகத்தை திறந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.