கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்களுக்கான பேச்சுப்போட்டி பொன்மலைப்பட்டி ஸ்ரீராம் மஹாலில்நடைபெற்றது. வரவேற்புரை K.பன்னீர்செல்வன், மாவட்ட வழக்கறிஞரணி தலைவர், தலைமை மாவட்ட மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் K.A.V.தினகரன், M.பன்னீர்செல்வன், சிறப்புரை பள்ளி கல்வித்துறை அமைச்சர், தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இரா.கிரிராஜன், தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு செயலாளர் மு.மதிவாணன், மாநகர கழக செயலாளர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. மாவட்ட மாநகர வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் A.பாலசுப்பிரமணியன், M.கண்ணன், பா.சதாசிவம், பி.செந்தில், எம்.ஜெயசித்ரா, ஜி.ராஜலிங்கம், T.செந்தில்குமார், C.முனீஸ்வரன், ம.ஜெகதீஸ்வரன், A.சுமதி, G.பிரபாகரன், N.கிருஷ்ணா, Dr.R.ராமச்சந்திரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் அ.த.த.செங்குட்டுவன், ரா.மூக்கன், வ.லீலாவேலு, இரா.குணசேகரன், R.A.நூர்கான், ஆறு.சந்திரமோகன், பொன்.செல்லையா, V.சரோஜினி பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ் மணிவேல் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நிகழ்வில் அமைச்சர் பேசுகையில்.... வழக்கறிஞர் அணி 'வடக்கே இருக்கும் கொள்கை எதிரிகளிடம் இருந்து நமது கழகத்தையும், நமது உரிமைகளையும் காப்பாற்றும் அணிதான் வழக்கறிஞர் அணி' என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது! நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இறுதி ஓய்விற்கு இடம் கிடைப்பதற்காக சட்ட ரீதியாக வாதாடியவர்கள் வழக்கறிஞர் அணியினர்.

வழக்கறிஞர்கள் நமது கலைஞர் அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அறத்தையும், நியாத்தையும் காப்பாற்றும் இடம்தான் நீதிமன்றம் என முழுமையாக நம்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் தனது எழுத்துகளில் பெரும்பாலும் தன்னை வழக்கறிஞராகத்தான் கருதிக்கொள்வார். அவரது எழுத்துகளில் உருவான திரைப்படங்களை ஆராயும் போது இந்த உண்மை புலப்படும். தனது கொள்கைகளை நீதிமன்றத்தின் வாதாடும் இடத்தில் இருந்து ஒரு வழக்கறிஞர் இடத்தில் இருந்துதான் பெரும்பாலும் சொல்லியிருக்கின்றார்.

 அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பராசக்தி! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வசனம் எழுதிய 7'வது திரைப்படம்!  ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்காக அந்தக் காலத்தில் கருதப்பட்ட மதுரை தங்கம் திரையரங்கத்தில் முழுமையாகக்கூட கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. அதில் முதல் படமாக பராசக்தி வெளியானது. சுமார் 2,500 பேர் அமரக்கூடிய இந்தத் திரையரங்கில், படிகளிலும் உட்கார்ந்து படத்தைப் பார்த்தார்கள். காரணம் அந்த நீதிமன்ற காட்சிதான்!

பராசக்தி திரைப்படத்தின் மூலக்கதையை எழுதியவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பாவலர் பாலசுந்தரம். இந்த நாடகம் தேவி நாடகக் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டுவந்தது. இந்த நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்சின் பி.ஏ.பெருமாள் முதலியார் அதனைப் படமாக்க விரும்பினார். இதைப்பற்றி அவர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கலந்தாலோசித்த போது, ஏ.வி.எம். மற்றும் நேஷனல் பிக்சர்ஸ் இணைந்து படத்தைத் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

கிருஷ்ணன் - பஞ்சுவிடம் இயக்கம் ஒப்படைக்கப்பட்டது. மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த கலைஞர் அவர்களிடம் திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதுவரை உச்சத்தில்தான் இருந்தார் கலைஞர் அவர்கள். அப்படம் வெளிவந்த பிறகு இப்போது வரை யாரும் தொடமுடியாத புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.அதில் குணசேகரன் எனும் கதாபாத்திரத்தின் வழியாக கலைஞர் அவர்கள்தான் அந்தகால அரசாங்கத்தைப் பார்த்து வாதாடியிருப்பார்!

இந்தப் படத்தில் வசனம் எழுதியதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அன்றைய ஆளும் அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு நெருக்கடிகள் வந்தது! ஒரு பத்திரிகை பராசக்தி படத்தைப் பற்றிய கேலி சித்திரத்தை வரைந்து 'கதை மற்றும் வசவு தயாநிதி' எனவும் எழுதியிருந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை.

அதே 'பரப்பிரம்மம்' எனும் பெயரில் ஒரு நாடகத்தை எழுதினார். அன்றைய ஆளும் அரசாங்கத்தை எதிர்த்தும், அறமற்ற இதழியலை எதிர்த்தும் அந்த நாடகத்தில் வசனங்களை எழுதினார். அந்த 'பரப்பிரம்மம்' நாடகம் தமிழ்நாட்டில் 100'க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடப்பட்டது! படத்தின் கருவாகவும், தனது கொள்கைகளுக்கான இடமாகவும் நீதிமன்ற காட்சியை பயன்படுத்தி வாதாடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்றும் ஏழை மக்களுக்காகவும், தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாதாடிக்கொண்டே இருப்பார்!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision