கள்ளிக்குடி காய்கறி மார்க்கெட் மீண்டும் திறப்பு?

கள்ளிக்குடி காய்கறி மார்க்கெட் மீண்டும் திறப்பு?

திருச்சியின் மையத்தில் செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக கள்ளிக்குடிக்கு மாற்றப்பட இருந்தது. இதற்காக மாநகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கள்ளிக்குடி என்ற ஊரில் 2014ஆம் ஆண்டு 830 கடைகளை கொண்ட மொத்த காய்கறி விற்பனை மையம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கட்டப்பட்டு 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

மாநகரில் இருந்து தொலைவில் அமைந்திருக்கும் இந்த மார்க்கெட்டை தொலைவில் இருப்பதுடன், சில வசதிகள் இல்லை என்ற காரணத்தினால் வியாபாரிகள் புறக்கணித்ததால் அந்த மார்க்கெட் இயங்காமல் இருந்து வந்தது. பலமுறை வேளாண் வணிக துறை அதிகாரிகள் வியபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அங்கு கடைவைக்க முன்வராமலே இருந்தனர்.  

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு மூணு சில பழ வியாபாரிகள் 180 கடைகளை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வாடகைக்கு எடுத்து கொண்டனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இறக்குமதி செய்வதுடன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் அனுப்பப்படுகிறது. தற்போது இந்த கள்ளிக்குடி மார்க்கெட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலேயே ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய உள்ள நிலையில் மறுபடியும் இந்த மார்க்கெட்டை திறக்க அதிகாரிகளஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போக்குவரத்து வசதி, காய்கறிகள் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கும் அளவிற்கான சேமிப்பு கிடங்கு போன்றவற்றை செய்திடவும், தற்போது கடை வைத்துள்ள பழ வியாபாரிகளை போல் மற்ற வியாபாரிகளை ஈர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision