நடை பயிலும் குழந்தைக்கு பாத மறு இணைப்பு நுண் அறுவை சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
நடைபயிலும் குழந்தைக்கு பாத மறுஇணைப்பு நுண் அறுவைசிகிச்சை உலகளவில் சிறுவயது குழந்தைகளுக்கு செய்யப்பட்ட ஒட்டுறுப்பு நுண், அறுவைசிகிச்சை வரலாற்றில் இதுவும் இடம்பெறுகிறது
தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் இயங்கி வரும் காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் நடைபயிலும் குழந்தைக்கு துண்டிக்கப்பட்ட பாதத்தின் முன்பகுதியை பொருத்தும் நுண் அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருக்கின்றனர். வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கும் இந்த பாத மறுஇணைப்பு நுண் அறுவைசிகிச்சை உலக வாலாற்றில், மிகக் குறைந்த வயது குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பட்டியலில் இச்சாதனை நிகழ்வும் இதன்மூலம். இடம்பெற்றிருக்கிறது
1.5வயது குழந்தையின் கால், மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியபோது, அதன் முன்பாதப் பகுதி அனைத்து கால் விரல்களுடன் சேர்த்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட சோக நிகழ்வு ஏற்பட்டது. இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 3 மணி நேரங்கள் கழிந்து, திருச்சி, காவேரி மருத்துவமனைக்கு அக்குழந்தை மிகுந்த இரத்தப் போக்கின் காரணமாக, குறைந்த இரத்த அழுத்தம், இதய துடிப்பில் மாற்றம் என்ற நிலையில், துண்டிக்கப்பட்ட பாதப் பகுதியோடு அழைத்து வரப்பட்டது. பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மற்றும் நுண்அறுவைசிகிச்சைத் துறையைச் சேர்ந்த மருந்துவர்கள் குழு டாக்டர். எஸ். ஸ்கந்தா (துறைத் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர்) தலைமையில், டாக்டர். அடில் அலி, டாக்டர், முரளிதாசன் மற்றும் மயக்க மருந்தியல் துறையைச் சேர்ந்த டாக்டர். கே. செந்தில்குமார் தலைமையில், டாக்டர். P. சசிக்குமார் மற்றும் குழுவினர் டாக்டர். D. செங்குட்டுவன் (இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குளர், காவேரி மருந்துவமனை மற்றும் குழந்தை நலத்துறையின் தலைவர்) தலைமையிலான குழந்தை மருத்துவவியல் மருத்துவர்கள் ஆதரவோடு இந்த சிகிச்சை செயல்முறையை இக்குழந்தைக்கு மேற்கொண்டனர்.
ஏறக்குறைய 6 மணி நேரங்கள் நீடித்த இந்த நுண் அறுவைசிகிச்சையில் துண்டிக்கப்பட்ட பாத பகுதி, இக்குழந்தையின் உடலோடு மீண்டும் இணைக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட எலும்புப் பகுதியை இணைப்பநோடு மட்டுமல்லாது. பாதத்திலுள்ள அனைத்து தசைநாண்கள், நரம்புகள் மற்றும் இரத்தநால் இணைப்பு சரிசெய்தல் ஆகியவை இந்த அறுவைசிகிச்சை செயல்முறையில் இடம்பெற்றன.
இந்த வெற்றிகர அறுவை சிகிச்சையானது, கடந்த ஆண்டு டெல்டா வகை கோவிட் அலை நாடெங்கும் பரவலாக. இருந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. கோவிட் பரவலின் காரணமாக இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்ட ஒட்டுமொத்த மருத்துவக் குழுவினருக்கும் அதிக ஆபத்து இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாது இது செய்யப்பட்டது இச்சாதனைக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது.
அளவில் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான இரத்தநாளங்களை, ஏறக்குறைய நம் மனிததலைமுடியின் அகலத்தில் 1/3-1/4 என்ற அளவே உள்ள இணைப்புத் தையல் நூலைக் கொண்டுமீண்டும் இணைக்கும் சாதனை இந்நிகழ்வில் நடந்திருக்கிறது. இதை சரியாக ஒப்பிடவேண்டுமென்றால், ஒரு பால்பாய்ண்ட் பேனாவின் முனையானது, அளவில் 0.7 மி.மீ. என இருக்கிறது. இந்த அளவல் இருக்கும் இரத்த நாளங்களில் தான் இந்த உயர் துல்லியமான அறுவைசிகிச்சையானது இக்குழந்தைக்கு செய்யப்பட்டது. மறுஇணைப்பு / மறுபதியம் என்பது, அதிக சவாலான நுண்அறுவை சிகிச்சை செயல்முறைகளுள் ஒன்றாகும்.
இதற்கு அனுபவமும், மிக திறனும் உள்ள சிறப்பு மருத்துவர்கள், சிறப்பு செயல்உத்திகள் மற்றும் உயர்நிலை சாதனங்களின் பயன்பாடு ஆகியவை அவசியம். உலகளவில் நவீன அறுவைசிகிச்சைக்கான மைக்ரோகோப்களுள் (நுண்ணோக்கி) ஒன்றான கினிலோ மைக்ரோஸ்கோப், திருச்சி காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டிருக்கிறது. ரீபிளாண்டேஷன் என சொல்லப்படும் மறுபதியம் / மறு இணைப்பு என்பது, ஒரு 1 துண்டிக்கப்பட்ட உடற்பகுதியை உடலோடு மீண்டும் இணைக்கின்ற அறுவைசிக செயல்முறையைக் குறிக்கிறது.
டிரான்ஸ்பிளான்டேஷன் என்று சொல்லப்படும் மாற்றுப்பதில் / உறுப்புமாற்று சிகிச்சை என்பது வேறொரு நபரிடமிருந்து பெறப்படும் உடலுறுப்புகளை ஒரு நபருக்குப் பொருத்துவதைக் குறிக்கிறது. உலக மருத்துவர் வரலாற்றில் மிக குறைந்த வயது வாலாற்றில் மிககுறைந்த வயது குழந்தைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் பாத மறுஇணைப்பு நிகழ்வுகளுள் ஒன்றாக, பதிவு செய்யப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட சாதனை நிகழ்வு இருப்பதால், இது உண்மையிலேயே மிகவும் சிறப்பானதாகும். பாத மறுஇணைப்புகள் மிகவும் அரிதானவை மற்றும் பாத மறுஇணைப்பு செய்யப்பட்ட பின்னர் அப்பகுதியின் பிழைப்பு விகிதங்களும் மிகக்குறைவாகவே இருக்கின்றன. உலகளவில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான பாத மறுஇணைப்பு செயல்முறைகள் மிகக்குறைவான மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மிக நவீன சிகிச்சை செயல்முறை செய்யப்படவில்லை எனில், விபத்தில் சிக்கிய இந்த சின்னஞ்சிறு குழந்தை அதன் பாதத்தை முற்றிலுமாக இழந்திருக்கும் மற்றும் அதன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறவாறு பாதத்தை வெட்டியெடுத்த நிகழ்வும் மற்றும் அது ஏற்படுத்துகின்ற வடுவும் மனதில் நிலைத்திருக்கும். இந்த சாதனையின் மூலம் திருச்சி காவேரி மருத்துவமனையும் மற்றும் டாக்டர் ஸ்கந்தா தலைமையிலான மருத்துவர்கள் குழுவும் உலகின் மிக உயர்ந்த மற்றும் பிரத்யேக மருந்துவ சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். ஒன்றரை வயதான இக்குழந்தை, இச்சிகிச்சைக்குப் பிறகு இயல்பான பாத செயல்பாட்டை மீண்டும் பெற்றிருக்கிறது. இத்தகைய ஒரு பெரிய அறுவைசிகிச்சை இக்குழந்தைக்கு செய்யப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்ற எந்த அறிகுறியும் வெளிப்படாதவாறு மற்றவர்களைப்போல இயல்பான உணர்திறனைக் கொண்டிருக்கும் இக்குழந்தையால் இயல்பாக தடக்க முடிகிறது. இப்போது குறும்புத்தனமும், சுறுசுறுப்பும் கொண்ட குழந்தையாக பிளே ஸ்கூலில் சேர்வதற்கு இக்குழந்தை ஆர்வத்தோடு காத்திருக்கிறது.
இன்று, (ஜூலை 15) தேசிய பிளாஸ்டிக் சர்ஜரி தினத்தை கொரவிக்கும் விதமாக, இந்தசாதனை நுண் அறுவைசிகிச்சை காட்சிப்படுத்தப்பட்டது. இத்துறையில் பெரும்சிறப்புப்பிரிவாக மைக்ரோசர்ஜரி எனப்படும் நுண்அறுவைசிகிச்சை இருக்கிறது. மறு இணைப்பு அறுவைசிகிச்சை, நீரிழிவு பாதித்த பாத அறுவைசிகிச்சை, கை அறுவைசிகிச்சை, ஃப்ரீ பிளாப் அறுவைசிகிச்சை, புற்றுநோய் பாதிப்பிற்கான மறுகட்டமைப்பு சிகிச்சை, கை மற்றும் கால்களுக்கான நாய்பு அறுவைசிகிச்சை மற்றும் மிக சமீபத்திய யானைக்கால் நோய்க்கான சூப்பர் மைக்ரோசர்ஜரி ஆகியவை உட்பட பல்வேறு பரிமாணங்களை நுண்அறுவைசிகிச்சைப் பிரிவு கொண்டிருக்கிறது. இத்தகைய நுண் அறுவை. சிகிச்சைக்களுக்கான வசதிகள் அனைத்தையும் ஒரு கட்டமைப்பின் கீழ் திருச்சியில் வழங்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவ மையமாக திருச்சி காவேரி மருத்துவமளை புகழ் பெற்றிருக்கிறது. எண்ணிக்கையிலும் மற்றும் சிறப்பான சிகிச்சை விளைவுகளிலும் உலகளவில் மிகச்சிறந்த மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை இங்கு வழங்கப்படுகிறது.
டாக்டர் D. செங்குட்டுவன் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர்க டாக்டர் S. ஸ்கந்தா துறைத் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர், நுண் அறுவை சிகிச்சை துறை டாக்டர் K. செந்தில்குமார் துறைத் தலைவர் மற்றும் மயக்கவியல் நிபுணர். மயக்கவியல் துறை டாக்டர் M. முரளிதாசன் நுண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் P. திவ்யா நுண் அறுவை சிகிச்சை நிபுணர, ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLan