கொள்ளிடம் ஆற்றுக்குள் படுத்து உறங்கியவர் - தண்ணீர் சூழ்ந்து தத்தளிப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்பு

கொள்ளிடம் ஆற்றுக்குள் படுத்து உறங்கியவர் - தண்ணீர் சூழ்ந்து தத்தளிப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்பு

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தின் தூண் பகுதியின் கீழ் உள்ள சிமெண்ட் கட்டையில் 50 வயது மதிக்கத்தக்க உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது முக்கொம்பு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓட தொடங்கியது.

ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட நபரை, மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து கயிறு மூலம் தீயணைப்பு படை வீரர் ஒருவரை ஆற்றுக்குள் இறக்கி மற்றொரு கயிறு மூலம் ஆற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டு இருந்த நபரை, திருச்சி ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்பு துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சசிகுமார் (60) என்பது தெரிய வந்தது. இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு கொள்ளிடம் ஆற்றின் கீழே சிமெண்ட் கட்டையில் உறங்கி உள்ளார். தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் 60,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. விழித்து பார்த்தவுடன் தண்ணீர் சூழ்ந்ததால் அவரால் கரைக்கு வர முடியவில்லை. தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் அவர் மீட்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision