சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமையான கோவில் கும்பாபிஷேக விழா

திருச்சி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமையான செல்லாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.இதனை முன்னிட்டு கடந்த 27ம் தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்தது வரப்பட்டு யாகசாலையில் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து 28ம் தேதி
முதல்கால யாக பூஜைகளாக பக்தி கணபதி பூஜை, கும்ப அலங்காரம் பூர்ணாஹூதி நடைப்பெற்றது.இதன்முறையே 29ம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைப்பெற்று விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று விமர்சியாக நடைபெற்றது.முன்னதாக யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று மூலவ விமானம் கலசம், பரிவார தெய்வங்களின் விமான கலசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.தொடர்ந்து மங்கள இசைகள் முழங்க வேத விற்பன்னர்கள் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் மேட்டுப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் விழாவிற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision