காவேரி மருத்துவமனை சார்பில் லேப்ராஸ்கோப்பி செய்முறை பயிற்சி மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி
காவேரி மருத்துவமனை குடல் அறுவை சிகிச்சை துறையின் சார்பாக 07.10,2022, 08.10.2022 மற்றும் 09.10.222 ஆகிய தினங்களில் திருச்சி சங்கம் ஹோட்டலில் அட்வான்ஸ் லேப்ராஸ்கோப்பி செய்முறை பயிற்சி மற்றும் கலந்தாய்வு நடைப்பெற்றது. (CATALYST SERIES - VI) தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பாடத்திட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இது ஆறாவதுவருடம் ஆகும். Dr.S.வேல்முருகன் கோர்ஸ் இயக்குநர் உரையாற்றுகையில் பங்கு பெற்ற அனைவரும் அனுபவமிக்க நிபுணர்களால் மூன்று நாட்களுக்கு செயல் முறை பயிற்சி பெற்றனர். இந்த செயல்முறை ஆய்வில் நேரடி லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் அதிநவீன லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறைகளை பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த பயிற்சியை திருச்சி மாநகராட்சிஆணையர் வைத்தியநாதன் IAS தொடங்கி வைத்தார். Dr.D.செங்குட்டுவன் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் காவேரி மருத்துவமனை, கலந்து கொண்டு சிறப்பித்தார். Dr.D.செங்குட்டுவன் அவர்கள்காவேரி மருத்துவமனை தொடர்ந்து பல இது போன்ற பயிற்சிகளைநடத்துவதன் மூலம் சிறந்த மருத்துவ சேவையினை வழங்கிவருவதாக கூறினார்.
நேரடி அறுவை சிகிச்சை,காணொலி தொலைக்காட்சியின் மூலம் நடத்தப்பட்டு,பயிற்சி மையத்திற்கு ஒளிப்பரப்பப்பட்டது.
Dr.S.வேல்முருகன் துறை தலைவர் மற்றும் மூத்த மருத்துவர் லேப்ராஸ்கோப்பி குடல் இரைப்பை மற்றும் உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் (CATALYST Series -VI) இந்த பாடத்திட்டம் நடத்தப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO