திருச்சியில் வாளி பறந்த வக்கீல் சங்க ஆண்டு விழா - மோதல் தால்ஷா குளியல்

திருச்சியில் வாளி பறந்த வக்கீல் சங்க ஆண்டு விழா - மோதல் தால்ஷா குளியல்

திருச்சி குற்றவியல் வக்கீல்கள் சங்கத்தின் 46வது ஆண்டு விழா நேற்று மத்திய பஸ் நிலையத்தின் அருகே உள்ள சீனிவாச மகாலில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர். விழா கூட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேசத் தொடங்கினார். அப்போது விழா நடந்த அரங்கிற்கு அருகே உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிக்கன் பிரியாணி, தால்சா, சிக்கன் கிரேவி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரமாகிறது சாப்பாடு போடுங்கள் என்று கூறினார். இதனால் வக்கீல்களுக்குள் காரசாரகமான விவாதமும் அடுத்தடுத்து கைகலப்பும் அங்கு அமர்ந்து சாப்பிட போடப்பட்டிருந்த சேர்களை ஒருவர் மீது ஒருவர் தூக்கி எறிந்தனர். 

ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் சம்பவமும் நடந்தது. அதில் குற்றவியல் வக்கீல் சங்கத்தின் பொருளாளர் கிஷோர் குமார் மீது சாம்பார் வாளி கவித்து இருந்தது. பிறகு மேடையில் இருந்து கீழே வந்த சங்கத்தின் செயலாளர் வெங்கட், கிஷோர்ரை தாக்கிய வக்கீல்கள் மீது களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தினார்.

இப்படியாக 30 நிமிடங்களுக்கு மேல் ஒருவர் மீது ஒருவர் தாக்குவதும் அடிப்பதும் என விழா நடந்த அரங்குக்கு அருகே இருந்த உணவு கூடத்தில் பெரும் பரபரப்பும் கலவரமும் ஏற்பட்டது.

வக்கீல்கள் சங்க ஆண்டு விழாவில் குடும்பத்தோடு சந்தோஷமாக ஒருவரை ஒருவர் அன்பை பரிமாறி கொள்ள வேண்டிய இடத்தில், அடிதடியில் தொடங்கி கசப்பான அனுபவங்களை அனைவரும் சந்தித்து விட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision