திருச்சி மாநகர காவல் ஆளிநர்களுக்கு சட்ட விழிப்புணர்வு வகுப்பு.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், இன்று (28.12.2024)-ந் தேதி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை சமுதாய கூடத்தில் திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு "சட்ட விழிப்புணர்வு வகுப்பு" (Law Awareness Class) நடைபெற்றது.
இச்சிறப்பு வகுப்பில், 1) 35(3) BNSS (Bharatiya Nagarik Suraksha Sanhita) (கு.வி.மு.ச 41(A)) சட்டப்பிரிவின் பயன்பாடு குறித்தும், 2) எதிரிகளை காவலர் காவலில் (Police Custody) எடுத்து விசாரணை செய்வது குறித்தும், 3) வாகன விபத்து வழக்குகளில் விசாரணையை திறம்பட செய்வது குறித்தும், 4) எதிரிடை வழக்குகளில் (Case in Counter) திறம்பட விசாரணை செய்வது அது சம்மந்தமான மாண்பமை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும்,
5) சிசிடிவி, அலைபேசி பதிவுகள்(CDR) போன்றவைகளின் தடயங்களை சேகரிப்பது குறித்தும், 6) போக்சோ வழக்குகளில் திறம்பட விசாரணை செய்வது குறித்தும், 7) இளம்பிழையாளிகள் சட்டம் ஆகியவை குறித்தும் J.செல்வராஜ், துணை இயக்குநர், குற்ற வழக்கு தொடர்பு துறை தலைமையில் S.G.ராமசந்திரன், உதவி அரசு வழக்கறிஞர், திருச்சி, S.ஹேமந்த், உதவி அரசு வழக்கறிஞர், திருச்சி. R. விஜயராணி, உதவி அரசு வழக்கறிஞர், திருச்சி மற்றும் தண்டபானி, அரசு உதவி வழக்கறிஞர், கரூர் ஆகியோர்கள் கலந்து கொண்டும் இச்சிறப்பு வகுப்பினை நடத்தினார்கள்.
மேலும் மூன்று புதிய சட்டங்களை (BNS, BNSS, BSA) பற்றிய சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர். திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என சுமார் 300 நபர்கள் இந்த சட்ட வழிப்புணர்வு வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இக்கூட்டத்தில் S.செல்வகுமார், காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision