திருச்சியிலிருந்து கொல்லிமலைக்கு தப்பிய சிறுத்தை புகைப்படம் வெளியீடு

திருச்சியிலிருந்து கொல்லிமலைக்கு தப்பிய சிறுத்தை புகைப்படம் வெளியீடு

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ஆங்கியம் பகுதியில் உள்ள மலை காடு ஒன்றில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறுத்தையை தேடி கிராம நிர்வாக அலுவலர் உட்பட பொதுமக்கள் மலைப் பகுதியில் தேடினர். அப்போது புதர் ஒன்றில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென வெளிப்பட்டு ஆங்கியம் கிராமத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் மற்றும் துரைசாமி ஆகிய இருவரை பலமாகத் தாக்கி விட்டு ஓடி மறைந்தது.

இதையடுத்து சிறுத்தை பதுங்கி இருந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராவை பொருத்தி முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனத்துறையினர் பொருத்திய கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகி இருந்தது.

மேலும் சிறுத்தையின் காலடி தடத்தை கண்டறிந்த வனத்துறையினர் காலடி தடத்தை பின்தொடர்ந்து சென்றனர். சிறுத்தை கொல்லி மலை அடிவாரப் பகுதியில் நோக்கி சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

ஆங்கியம் அழகாபுரி கிராம பகுதிகளுக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் இரவு நேரங்களில் வரவேண்டாம் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை இருவரை தாக்கிவிட்டு பதுங்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சம் அடைந்துள்ளனர்.

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu