பை நிறைய பணம் - சொந்தம் கொண்டாடி இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் மோதல்

பை நிறைய பணம் - சொந்தம் கொண்டாடி இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் மோதல்

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு ஐந்து மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும். இதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துக்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்து நிலையத்திற்கு மற்ற மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பேருந்து பயணிகள் நாள்தோறும் வருகை தரும் இந்நிலையில், பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆதரவற்றவர்கள் மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் யாசகம் பெற்று மத்திய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் தங்கி உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு அருகில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணும், தமிழகத்தைச் சேர்ந்த ஆணும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி வியாபாரிகள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சண்டை போட்டு கொண்ட இருவரையும் தடுத்து விட்டு என்னவென்று விசாரித்தனர். அப்போது தான் வைத்திருந்த பண பையை மாற்றுத்திறனாளி நபர் திருடி விட்டதாக வட மாநிலத்து பெண தெரிவித்தார். இதே போன்று தான் வைத்திருந்த பணத்தை வடமாநிலத்தில் திருடி விட்டதாகவும் மாற்றுத்திறனாளி தெரிவித்தார்.

இதனால் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக மத்திய பேருந்து புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரண நடத்தினர். இதில் மத்திய பேருந்து நிலையத்தில் படுத்திருந்த போது தான் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த பண பையை வட மாநிலத்தை பெண் திருடி விட்டதாக மாற்றுத்திறனாளி நபர் தெரிவித்தார். வடமாநிலத்தை பெண் ஹிந்தியில் கூறுவதை காவல்துறையால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதற்கிடையில் அக்கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த வட மாநிலத்து பெண் கூறுவதை மொழிபெயர்த்து காவல்துறையிடம் தெரிவித்தார். பேருந்து நிலையத்தில் வழக்கமாக தான் படுத்திருப்பதாகவும் பிச்சை எடுத்து சேமித்து  வைத்திருந்த பண பையை மாற்றுத்திறனாளி நபர் திருடி விட்டதாக அந்த வடமாநிலத்தை பெண் தெரிவித்தார். இந்த பண பை யாருடையது என்பது தெரியாததால் இரண்டு பேரையும் புறக்காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

பிச்சை எடுக்கும் இவர்களிடம் சில்லரை காசு மற்றும் பணம் ஒரு பை நிறைய இருப்பதைக்கண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் ஒருவேளை உணவு கூட சரியாக உண்ணாமல், சத்தான உணவு சாப்பிடாமல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளாமல் நாள் முழுவதும் பிச்சை எடுத்து யாருக்காக இவர்கள் சேர்த்து வைக்கிறார்களோ என அங்கிருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn