காலையில் திருமணம் - மாலையில் மாரடைப்பால் உயிரிழந்த மணமகன் - திருச்சி அருகே சோகம்!!

காலையில் திருமணம் - மாலையில் மாரடைப்பால் உயிரிழந்த மணமகன் - திருச்சி அருகே சோகம்!!

Advertisement

திருச்சி அருகே கொணலை பகுதியில் வசித்து வந்தவர் மலைச்சாமி குடும்பத்தினர். இவருடைய மகன் விக்னேஸ்வரன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு தன்னுடைய சொந்த ஊரான ராமநாதபுரம் இளஞ்செம்பூரில் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளனர்.

Advertisement

அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய பூர்வீக கிராம பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டு கடந்த 24ம் தேதி காலை விக்னேஸ்வரனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அன்று மாலை விருந்திற்காக மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

அப்போது மணமகன் விக்னேஸ்வரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.உடனடியாக அங்குள்ள சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

திருமணம் முடிந்த அன்றே மணமகன் இறந்தது மணமகன் வீட்டாரையும், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.