கவுன்சிலரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த மேயர் - செய்தியாளர்கள் வாக்கு வாதம்

கவுன்சிலரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த மேயர் - செய்தியாளர்கள் வாக்கு வாதம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்அறிவித்தாரட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் தலைமையில் இன்று தொடங்கியது.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கடந்த மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி 63வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்கொடி தனது வார்டில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறி மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கு அல்வா கொடுத்த விவகாரத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் பொற்கொடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறினார். இதற்கு பதில் அளித்த பொற்கொடி தனது வார்டில் எந்த ஒரு திட்டங்களும் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்தில்தான் இது போன்று இனிப்பு கொடுத்து, தனது கருத்தை வெளிப்படுத்தினேன் என்றார். இதில் எந்த ஒரு தவறும் இருந்ததாக தெரியவில்லை. அதனால் மன்னிப்பு கேட்கமுடியாது என ஆவேசத்துடன் கூறினார்.

ஆனால் மேயரோ 63வது வார்டில் 12.50 கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது உங்களுக்கு தெரியாதா, நீங்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை பாயும் என மிரட்டல் விடும் தொனியில் கூறினார். கடந்த காலங்களில் இது போன்று மாமன்ற கூட்டத்தில் தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் நீதிமன்றம் சென்று பின்னர் பங்கேற்ற சம்பவங்களும் உள்ளது.

எனவே ஆட்சிக்கு மற்றும் மாவட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இது போன்று நடந்து கொண்டதற்கு கவுன்சிலர் பொற்கொடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து மேயர் மிரட்டல் விடுத்தார். அதேநேரம் மாநகராட்சி கோட்ட தலைவரும், அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியின் ஆதரவாளருமான மதிவாணன் மற்றும் சக திமுக கவுன்சிலர்களும் மாமன்ற உறுப்பினரான பொற்கொடியை மன்னிப்பு கேட்ககோரி வற்புறுத்தினர்.

மாநகராட்சி கவுன்சிலர் பொற்கொடிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங்களில் இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தங்களது கருத்துக்களை இது போன்று வெளிப்படுத்தி உள்ள சூழலில் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள கூடாது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என தெரிவித்தார்.

அதேநேரம் திமுக கவுன்சிலர் பொற்கொடி, பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் நான் கூறியதை தவறாக வெளியிட்டுள்ளனர் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று இனிமேல் நேராது என தெரிவித்த நிலையில், மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பத்திரிக்கையாளர்களும் எவ்வாறு பத்திரிகைகளில் தவறாக பதிவிட்டுள்ளதாக நீங்கள் கூற முடியும் நீங்கள் பேசியதை தான் அப்படியே குறிப்பிட்டுள்ளனர் . பத்திரிகையை தவறாக பேசக்கூடாது என கண்டித்தனர்.

இதனை அடுத்து அங்கு மேயர், கவுன்சிலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் என அனைவருக்கும் இடையே வார்த்தை போர் முற்றியதால் மாநகராட்சி கூட்டமே கூச்சல் குழப்பம் மிகுந்து காணப்பட்டது. அதன் பின்னர் சக திமுக மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரச்சனையை முடித்து வைப்பதாக மேயர் அறிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vis