இயற்கை விவசாய இடுப்பொருள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு செய்முறை விளக்கம்.

இயற்கை விவசாய இடுப்பொருள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு செய்முறை விளக்கம்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே

உப்பிலியபுரம் உட்கோட்டம், வேளாண் உதவி இயக்குநர் செல்வகுமாரி வழிகாட்டுதலின் படி வேளாண் மாணவர்களுக்கு பீ.மேட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை விவசாயி ரெங்கநாதன் தோட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருள் குறித்து ஆத்மா திட்டத்தின் கீழ் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் துர்கேஷ், கோகுலபிரகாசம், கௌதமன், குணாளன், இஷாக், ஜெயராகவன், ஜெயந்த் ராஜன், கார்த்திகேயன் மற்றும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அனுஷா, அபிராமி, அக்லின் செரின், அலமேலு அனுஷா, அர்ச்சனா, ஆர்த்தி, அருந்ததி, அஸ்வினி, பைரவி ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை விவசாய இடுப்பொருட்கள் குறித்து செய்முறை விளக்கத்தை கேட்டு அறிந்து கொண்டனர்.மேலும், இயற்கை விவசாயி ரெங்கநாதனுடன் கலந்துரையாடி இயற்கை விவசாயம் பற்றி தெளிந்த விளக்கத்தினை கற்று அறிந்து கொண்டனர்.