திருச்சியில் உள்ள மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

திருச்சியில் உள்ள மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

திருச்சி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட பகுதிகளில் பருவமழை துவங்கும் முன் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு நகர்புற துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் மேலும் சிலபகுதிகள் 

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் திருவடித் தெரு, ராஜாஜி தெரு, ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம், அம்பேத்கார் நகர், புதுத்தெரு, அய்யன்வெட்டிதெரு, புதுத்தெரு, சிந்தாமணி, வெணிஸ் தெரு, 3வது குறுக்கு தெரு, கீழ சிந்தாமணி, சத்திய நகர், சின்னகடை வீதி, கல்யாணசுந்தரபுரம், சின்ன சௌவுக் தெரு, மேல காசிபாளையம், ஜாபர்ஷா 
தெரு, ஜலால்குதிரி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர் வாரி 1090 மீட்டரும், 


அரியமங்கலம் கோட்டத்தில் காந்திஜி தெரு, கிருஷ்ணாபுரம் முஸ்லீம் தெரு, உப்பிலிய தெரு, பூந்தோட்ட தெரு, ஜெயில் தெரு, ஆனந்தபுரம், நடுத்தெரு வரகனேரி, கீழபடையாச்சி தெரு, குட்செட் ரோடு, கான்மியான் மேட்டுத் தெரு, துரைசாமிபுரம், ஆலத் தெரு, சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு, அப்துல் கலாம் ஆசாத் தெரு, குடிசை மாற்று வாரியம், சங்கிலியாண்டபுரம், வினோபாஜி தெரு, அருந்தியர் தெரு, கூத்தாப்பர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர் வாரி 3070 மீட்டரும்,

பொன்மலை கோட்டத்தில் பென்சனர் தெரு மற்றும் அதன் குறுக்கு, தெற்கு யாதவ தெரு மற்றும் அதன் குறுக்கு, அந்தோணியார் கோவில் தெரு மற்றும் அதன் குறுக்கு, துர்க்கையம்மன் கோவில் தெரு மற்றும் அதன் குறுக்கு, கான்வென்ட் ரோடு மற்றும் அதன் குறுக்கு, போலீஸ் காலனி மற்றும் அதன் குறுக்கு, கொட்டக்கொல்லை தெரு மற்றும் அதன் குறுக்கு, சவேரியார் கோவில் தெரு மற்றும் அதன் குறுக்கு, செபஸ்தியார் கோவில் தெரு மற்றும் அதன் குறுக்கு, மேலப்புதூர் மற்றும் அதன் குறுக்கு, ஆஞ்சநேயர் கோவில் தெரு மற்றும் அதன் குறுக்கு, கோரி மேடு மற்றும் அதன் குறுக்கு, பகவதி அம்மன் கோவில் மற்றும் அதன் குறுக்கு, மேட்டு தெரு மற்றும் அதன் குறுக்கு, மதுரை வீரன் கோவில் தெரு மற்றும் அடைக்கலமாதா கோவில் தெரு மற்றும் அதன் குறுக்கு ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர் வாரி 4065 மீட்டரும், 


கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் பிரான்சினா காலனி, விறகுப்பேட்டை தெரு, ஆல்பா நகர், இதாயத் நகர், வாமடம், பென்சினர் தெரு, கீழவண்ணாரப்பேட்டை, கொடாப்பு மெயின் ரோடு, வடக்கு பாய்காரத்தெரு, செவந்தி பிள்ளையார் கோவில் தெரு, வடவூர், ஹவுசிங் யூனிட் மேல நடு மின்னப்பன் தெரு, நடுபங்காளித்தெரு, தெற்கு வெள்ளாளத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர் வாரி 1400 மீட்டர், மொத்தம் 9,625 மீட்டர் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

இப்பணி உதவி ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து தெருக்கள் வாரியாக தூர்வாரும் பணி திட்டமிடப்பட்டு தினசரி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என 
ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve