வெளிநாட்டு பயணிகளுக்கு ஹஜ் யாத்திரைக்கு தடை- ஹஜ் அமைச்சகம் அறிவிப்பு

வெளிநாட்டு பயணிகளுக்கு ஹஜ் யாத்திரைக்கு தடை- ஹஜ் அமைச்சகம் அறிவிப்பு

முஸ்லிம்களின் புனிதத் தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜுலை மாத இறுதியில் ஆரம்பமாகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நேரத்தில் ஹஜ் பயணத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து சவுதி அரேபிய அரசு பல ஆலோசனை மேற்கொண்டனர். 2021 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 60,000 யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹஜ்  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகர்கள் பயணத்தில் சவுதி குடிமக்கள் மற்றும் சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் என மொத்தம் 60 ஆயிரம் பேர் மட்டுமே யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. ஜூலை மாத இறுதியில் ஹஜ் பயணம் தொடங்க உள்ளது.

தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், 65 வயதிற்கு கீழானவர்கள் தீவிர நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து ஹஜ் பயணத்துக்கு  சவுதி அரேபிய அரசு தடைசெய்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக  இந்த இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று இந்திய ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டும் கொரோனா முதல் அலை காரணமாக ஹஜ் புனித யாத்திரை பாதிக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் வசித்து வந்த 10,000 வெளிநாட்டினருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve