மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

2023 வருடத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. நீதித்துறை மருத்துவத்துறை சிறைத்துறை தீயணைப்பு துறை சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெறுவது வழக்குகளை திறம்பட கையாளுவது, குற்றவாளிகளை கைது செய்வது, நிலுவையில் உள்ள மருத்துவத்துறை தொடர்பான ஆவணங்களை உடன் பெறுவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி நடவடிக்கை. கஞ்சா மற்றும் போதை வழக்குகளில் குற்றவாளிகளை பிணையில் வர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டியது, பொங்கல் விழா தொடர்பான அனைத்து விஷயங்களும் கலந்தாய்வு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்  தலைமையில்  நடைப்பெற்றது.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

      
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn