நான் உழைத்து கிடைக்காத பெருமை என் மகன் மூலம் கிடைத்துள்ளது- மிஸ்டர் இந்தியா கார்த்திக் திருச்சியில் பேட்டி

எனது உழைப்புக்கு கிடைக்காத பெருமை, எனது மகன் மூலம் பெற்றுத் தந்துள்ளது - "பேபி அண்ட் பேபி" திரைப்படத்தில் நடித்த குழந்தையின் தந்தையும்,மிஸ்டர் இந்தியா கார்த்திக் பெருமிதம்
யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சத்யராஜ், ஜெய் மற்றும் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி திரைப்படம் தமிழக முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக திருச்சி சீனிவாசநகரை சேர்ந்த மிஸ்டர் இந்தியா கார்த்தி - ஆர்த்தி தம்பதியரின் 10 மாத குழந்தை ஹர்ஷித் நடித்துள்ளான்.
இந்த திரைப்படம் திருச்சியில் மெயின்காட்கேட்டில் உள்ள LA திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
படத்தை கார்த்திக் தம்பதியர்கள் தங்கள் குழந்தையுடன், குடும்பத்துடன் கண்டுகளித்தனர்.
பின்னர் குழந்தை ஹர்ஷித் தந்தை மிஸ்டர் இந்தியா கார்த்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்...
கடந்த ஐந்து வருடமாக திரைப்படத்தின் நடிக்க வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருந்தேன், ஏங்கிய நாட்கள் உண்டு. மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் இந்தியா ஆகிய படங்களை வென்றுள்ளேன்.
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உடற்பயிற்சி செய்து என்னுடைய உடலை குறைத்து கொண்டேன்.
ஆனால் சினிமா கைகொடுக்கவில்லை, சரியான நேரம் வாய்ப்பு எனக்கு அமையவில்லை.
நான் உழைத்த உழைப்புக்கு கிடைக்காத பெருமைகள், என்னுடைய மகனுக்கு பிறந்த 10 மாதத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மிகப்பெரிய நடிகருடன் நடித்திருக்கிறான்.
சுமார் 5 வருடத்திற்கு பின்பு முழுமையான குடும்பப் திரைப்படமாக பிரதாப் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், யோகிபாபு, ஜெய் ஆகிருடன் என் மகன் நடித்திருக்கிறான்.
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர் என்று சொல்லப்படுகிற அனைவரும் இணைந்து நடித்துள்ள ஒரு திரைப்படம். இதில் எனது மகன் நடித்திருப்பது மிகவும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
நீங்கள் உண்மையாக உழைக்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் வெற்றி அடைய வேண்டும் என இலக்கை வைத்துக் கொள்ளாதீர்.
உங்களது உழைப்பு உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்க்கு கிடைக்கும். அது, தற்போது என் மகனுக்கு கிடைத்துள்ளது.
என் மகன் நடித்துள்ளது படத்தில் முதல் பாதியில் ஆணாகவும், மறு பாதியில் பெண்ணாகவும் நடித்திருப்பான். இது பிடித்த காட்சி என்னவென்றால் மகனை தங்கத் தொட்டியில் போடும் பொழுது சிரிக்கிற அழகு மிகவும் பிடித்துள்ளது. அதை நினைக்கும் போது அப்பாவாக எனக்கு பெருமையாக உள்ளது.
தற்பொழுது வேறு ஒரு திரைப்படத்திற்கு அழைப்பு வந்துள்ளது.இந்தப் பெரிய வாய்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.