திருச்சி அரசு மருத்துவமனைக்கு MST solutions நிறுவனம் உதவி 

திருச்சி அரசு மருத்துவமனைக்கு MST solutions நிறுவனம் உதவி 

திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் தொற்று இரண்டாம் அலையில் ஏராளமான நோயாளிகள் பாதிக்கபட்டு குவிய துவங்கி விட்டனர். இந்நிலையில் வரக்கூடிய நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு அளவு கண்டறியும் கருவிகள் அதிகமாக தேவைப்படுகிறது .கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 800 க்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் .

இதனால் உடனடியாக நோயாளிகளின் உடல் நிலையில் இரத்த கொதிப்பு அளவை கண்டறிய MST SOLUTIONS நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு   ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள 10 கருவிகளை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா மற்றும் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் மருத்துவர் ஏகநாதன்  முன்னிலையில் MST SOLUTIONS  நிறுவனத்தின் மூத்த மேலாளர் மனோஜ் கிங்ஸ்லி, மேலாளர் ஞானவேல் அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா MST SOLUTIONS நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd