8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் - குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!!

8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் - குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!!

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன.

Advertisement

அந்த வகையில் திருச்சி சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றான முக்கொம்பு சுற்றுலா தலமும் மூடப்பட்டது.

தற்போது கொரோனா படிப்படியாக குறைவதை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுற்றுலா தளங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. 

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளம் இன்று காலை திறக்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலம் சுற்றுலாப் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்,

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கினர். கடந்த 8 மாத காலமாக பூட்டப்பட்டிருந்தால் நேற்று பூங்கா முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் பழுது நீக்கப்பட்டு,சானிடைசர்கள் தெளிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பொழுதுபோக்கு பூங்காக்கள் என்பது குறைவுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு

ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக விளங்குகிறது.எனவே கடந்த எட்டு மாத காலமாக பொழுதுபோக்கு இன்றி இருந்த மக்கள் குடும்பம் குடும்பமாக தற்போது முக்கொம்புக்கு வருகை தருகின்றனர்.