30 ஆயிரம் லிட்டர் நீர்தேக்க தொட்டியின் படிகட்டை உடைத்த பேரூராட்சி பணியாளர்கள்
திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி உட்பட்ட நான்கு மற்றும் ஐந்து ஆகிய வார்டுக்கு பொது மக்களுக்கு குடிநீருக்கு செல்லும் 30 ஆயிரம் லிட்டர் நீர்தேக்கும் தொட்டியின் கான்கிரட் கலவையால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் பழுதாகி உடைப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில், பேரூராட்சி நிர்வாகம் நீர்த்தேக்க தொட்டியை பழுது பார்த்து படியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த வீட்டில் விழுமோ என அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். ஆனால் சாதுரியமாக கான்கிரட்களை வீட்டின் மேல் விழாமலும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தியதால் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision