ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் - திருச்சியில் துணிகரம்!!

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் - திருச்சியில் துணிகரம்!!

Advertisement

திருச்சி உறையூர் கீழ சாராயப் பட்டறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று கடையை முடித்துவிட்டு இரவு அப்பகுதி வழியாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னாலிருந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ஜாஸ்மின் கழுத்திலிருந்த 10 பவுன் சங்கிலியை பறித்து உடனடியாக குறத்தெரு புறக்காவல் நிலையம் வழியாக சென்றனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.