செந்தூர நிறப்பட்டு அணிந்து முத்து கொண்டையுடன் நம்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் திருமொழிக்காக செந்தூர நிற பட்டு அணிந்து முத்தரசன் கொரடு என்னும் திருநாரணன் முத்துக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் நெற்றி மேல் சூர்ய வில்லை சாற்றி (சூர்ய குல திலகம் என இராமரை பாடிய ஆழ்வாருக்காக),
சின்ன கல் ரத்தின அபய ஹஸ்தம், திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதற்கு மேல் ஸ்ரீ ரங்க நாச்சியார் - அழகிய மணவாளன் பதக்கம்; அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, பவழ மாலை ,6வட முத்து சரம், காசு மாலை; பின்புறம் - புஜ கீர்த்தி சிகப்புக்கல் சூர்ய பதக்கம்,
கையில் தாயத்து சரங்கள், தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision