தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைபள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் நிகழ்ச்சி

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைபள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் நிகழ்ச்சி

இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் இது 2008 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது, இது இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதை முன்னிட்டு இன்று திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைபள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ரோஜா பூ வினை பெண் ஆசிரியர்கள் கொடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஆரோக்கிய வாழ்விற்கு கடலைமிட்டாய் சேர்த்து வழங்கப்பட்டது.

குழந்தைகள் உதவி மையம் எண் 1098 மற்றும் 14417 ஆகிய தொலைபேசி எண்கள் குறித்தும், இணையதள பாதுகாப்பு மாணவர்கள் இணையத்தில் தங்களைப் பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், மாணவர் மனசு பெட்டி குறித்தும் விழிப்புணர்வினை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் உமா மற்றும் மேரி செரோபியா எடுத்து கூறினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision