பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

கொரோனா முன் களப்பணியாளர்களான கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரவிருக்கும் மினி கிளினிக்குகளில் பகுதி சுகாதார செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என்றும்,சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு தாய் சேய் நல அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாலின பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை கிராம சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மகப்பேறு பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், அரசு தலைமை மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களை போலவே கிராம,பகுதி,சமுதாய சுகாதார செவிலியர்களும் கொரோனா முன் கள பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள் ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு வழங்கப்படுவது போல எந்த வித சிறப்பு ஊதியமும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு வழங்கப்படுவதில்லை அவர்களுக்கும் கொரோனா காலத்தில் வழங்கப்பட வேண்டிய சிறப்பு ஊதியம்,பயணப்படி ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சங்கத்தின் நிர்வாகிகள் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.