ஒலிம்பிக் ஸ்டேடியம், ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்ட அதிகாரிகள் இடம் ஆய்வு

ஒலிம்பிக் ஸ்டேடியம், ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்ட அதிகாரிகள் இடம் ஆய்வு

திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மினி ஜல்லிக்கட்டு பயிற்சி மைதானம், ஒலிம்பிக் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

தமிழக அரசு ஜல்லிக்கட்டு ஊக்குவிக்கும் வகையில் தொகுதி ஒரு மினி பயிற்சி மையம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மினி ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கு முடிவு செய்தது அதற்குரிய இடமாக சூரியூர் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் அமைப்பதற்கு தகுந்த இடமாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்குரிய அனுமதிக்கு அரசுக்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் அரசு அதிகாரிகள் இன்று காலை அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

அடுத்து

திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் ரிங் ரோடு பகுதியில் அரசின் ஒலிம்பிக் அகாடமி, பாதுகாக்கப்பட்ட மத்திய சிறைச்சாலை முன்புறம் தற்பொழுது ஜல்லிக்கட்டு மினி மைதானமும் அமைய உள்ளது அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 48 ஏக்கர் இடத்தை அதிகாரிகள் ஆய் வு செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision