இந்தியாவிற்குள் நுழைந்த ஓமைக்ரான் - மக்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? 

இந்தியாவிற்குள் நுழைந்த ஓமைக்ரான் - மக்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? 

கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஓமைக்ரான் உருமாறிய கொரோனா தான். கடந்த காலங்களில் உருமாறிய வைரஸ் தான் கொரோனா அலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஓமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் சோர்வாக உணர்கின்றனர். குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் கடும் சோர்பு ஏற்படுகிறது எனக் கூற முடியாது. ஓமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வயதினருக்கும் கடுமையான சோர்வு ஏற்படுவதாக தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க வைரஸ் ஓமைக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும். ஒமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸின் காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதனையடுத்து, இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விடாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்தியாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்த வேண்டும். அறிகுறிகள் இருந்தால் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டால், உரிய வழிகாட்டுதலின்படி அவா்களுக்கு சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைக எடுக்க வேண்டும். ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்போது வரை இந்த நோய் தொடர்பான ஆய்வுகள்  நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல்,சமூக இடைவெளியை பின்பற்றுதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn