விபத்து கால முதலுதவி பற்றி திருச்சி போக்குவரத்து போலீசாருக்கு ஒரு நாள் பயிற்சி

விபத்து கால முதலுதவி பற்றி திருச்சி போக்குவரத்து போலீசாருக்கு ஒரு நாள் பயிற்சி

திருச்சி மாநகர காவல்துறை மற்றும் திருச்சி எலும்பு மூட்டு மருத்துவ சங்கம் 
சார்பில் திருச்சி மாநகர போக்குவரத்து பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்களுக்கான விபத்து கால முதலுதவி பற்றிய ஒரு நாள் பயிற்சி இந்திய மருத்துவ சங்கம் (IMC) ஹாலில் நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் வழிகாட்டுதலின்படி விபத்து காலத்தில் விபத்திற்குள்ளானவர்களுக்கு 
அவர்களின் காயங்களின் தன்மையை கண்டறிந்து, அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய முதலுதவி பற்றியும், அவசர கால ஊர்தி வரும் வரை விபத்திற்குள்ளானவர்களுக்கு 
கொடுக்கப்பட வேண்டிய முதலுதவி பற்றி

திருச்சி எலும்பு மூட்டு மருத்துவர் சங்க 
தலைவர் மருத்துவர் ஜெய்கிரிஷ், செயலர் மருத்துவர் முகேமோகன், பொருளாளர் 
மருத்துவர் ரமேஷ் பிரபு மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு 
அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சியின் மூலம் சாலை விபத்தில் First Respondent ஆகிய தங்களால் 
விபத்துக்குள்ளானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய முதலுதவிகள் பற்றியும், விபத்து ஏற்பட்ட முதல் அரைமணி நேரமான உயிரை காக்கும் பொன்னான நேரங்களில் தாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரை 90 சதவீதம் காப்பாற்ற முடியும் என்பதையும் மேற்படி மருத்துவர்கள் விளக்கி கூறியது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn