ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்க 'ஆப்ரேசன் ஸ்மைல்' புதிய திட்டம் - திருச்சியில் தொடக்கம்!!
திருச்சி ரயில்வே ஜங்சனில் 'ஆப்ரேசன் ஸ்மைல்' என்ற புதிய திட்டத்தின் துவக்க விழா ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. காணாமல் போன மற்றும் பெற்றோரை பிரிந்துள்ள குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் வகையில் இந்த சிறப்பு நடவடிக்கை துவக்கப்படுள்ளது.
Advertisement
பெற்றோர்களுடன் ஏற்படும் பிரச்சனைகளால் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறும் குழந்தைகள் மற்றும் பெண்கள், சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவ்வாறு வெளியேறும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முதலில் ரயில் நிலையங்களையே நாடிவரும் சூழல் உள்ளது.
அவர்களின் உயிருக்கும் மற்றும் உடைமைகளுக்கும் ஏற்படும் பாதிப்பினை களையவும், ரெயில்நிலையங்களில் குழந்தை தொழிலாளர்களாக அழைத்துவரப்படும் குழந்தைகளை மீட்பது, காணாமல் போன மற்றும் பெற்றோரை பிரிந்து பரிதவிக்கும் குழந்தைகளை சரியானமுறையில் அணுகி, கவுன்சிலிங் கொடுத்து குடும்பத்தினரிடம் மற்றும் அரசின் பாதுகாப்பு மையங்களில் அனுமதித்து பின்னர் பெற்றோர்களிடத்தில் பாதுகாப்பாக ஒப்படைப்பது தொடர்பாக 'ஆபரேஷன் ஸ்மைல்' திட்டம் இன்று திருச்சி ரயில்வே நிலையத்தில் ரெயில்வே கால்வதுறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் துவக்கிவைத்தார்.
Advertisement
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்... "இன்று முதல் 15ம் தேதிவரை இந்த ஆபரேஷன் செயல்படும் என்றும், குழந்தை தொழிலாளர் பணிக்காக அழைத்துச் செல்லப்படும், பெற்றோரை பிரிந்த குழந்தைகளை மீட்பதற்காக திருச்சி ரயில்வே மாவட்டத்திற்குட்பட்ட 24 காவல் நிலையங்கள், 6 புறக்காவல் நிலையங்களில் 30 இடங்களில் குழந்தைகள் மீட்பு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2வருடங்களில் 2,183 குழந்தைகள் மீட்டகப்பட்டுள்ளதாகவும், 90 சதவீதம் பேர் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டு, எஞ்சியோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பீகாரிலிருந்து குழந்தை தொழிலாளருக்காக அழைத்து வந்த குழந்தை மீட்கப்பட்டு, பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களில் காணாமல்போன குழந்தைகளின் விபரங்கள் பெறப்பட்டு ரயில்நிலையங்களில் அவர்கள் குறித்தும் சோதனை செய்யப்படும்" என்றார்