தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் தானாக வரும்- ஆர்ட் &கேக் தயாரிப்பில் அசத்தும் திருச்சி பெண்

உலகைப் பொருத்தவரை பெண்கள் என்றால் இதை தான் செய்வார்கள் என்று ஒரு முத்திரை வைத்துள்ளது ஆனால் அதையும் தனி திறமைகளாக மாற்றிதங்கள் வாழ்வாதாரத்தை மாற்றிக் கொண்டு தொழில் முனைவோராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் இக்கால பெண்கள்
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நதி, கலை மற்றும் கேக் பேக்கிங் இல் தனக்கான தனி அடையாளத்தை பதித்து சாதித்து வருகிறார் ..
இது குறித்து அவர் நம்மோடு பகிர்ந்து கொள்கையில்,
சிறு வயதிலிருந்து ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தனித்திறமை இருக்கும் அதை கண்டு கொண்டு கல்வியோடு அதை ஒப்பிடாமல் அவர்களுடைய தனி திறமைகளையும் வளர்த்தால் அதுவே அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் என்பதை என் வாழ்வில் நான் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டது
சிறுவயதிலேயே எனக்கு ஓவியங்கள் வரைவது பிடிக்கும் அதுவே நாளடைவில் ஒவ்வொரு கலைகளாக கற்றுக்கொண்டு இன்றைக்கு ஒரு அகாடமியை நிறுவகிக்கும் வகையில் என்னை வளர்த்துள்ளது.
முதலில் உறவினர்கள் நண்பர்கள் என்று தொடங்கிய இந்த பயணம் அடுத்த அடுத்த பல வாய்ப்புகளை எனக்கு அளித்தது.
ஓவியங்கள் போல் எனக்கு சிறுவயதிலிருந்து கேக் தயாரிப்பில் ஆர்வம் இருந்தது
போட்டி மிகுந்த இந்த உலகில் நமக்கான தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்றால் நம்முடைய தயாரிப்புகளும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு சிறுதானியங்களை பயன்படுத்தி அதில் கேக் பேக்கிங் செய்ய ஆரம்பித்தேன்.
Craft N cakes அடையாளமாக மாறியது.இன்று பல மாணவர்களுக்கும் கற்றுத் தந்து வருகிறேன்.
ஹோலி கிராஸ் கல்லூரியில் முதன்முதலாக ஆர்ட் அண்ட் கிராப்ட் பயிற்சி அளித்தேன் அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பங்கேற்க தொடங்கினேன் பல்வேறு இடங்களில் சிறப்பு பேச்சாளராகவும் அழைக்க தொடங்கினர்.
இன்றைய தலைமுறை அதிகமாக செல் போன் பயன்பாட்டில் மூழ்கியுள்ளனர் அவர்கள் இது போன்ற கலைப்பயிற்சிகள் அவர்களுடைய தனித்திறமையை வளர்க்கும் எந்த ஒரு பயிற்சி செய்யும் பொழுது முழு கவனத்தையும் அதில் செலுத்த உதவுகிறது இது அவர்கள் கல்விக்கும் உதவுகிறது.
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் நமக்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் தனி திறமையோடு நம்முடைய உழைப்பையும் கொடுத்தால் 100% வாழ்வில் வெற்றி அவ்வாறுதான் நான் எடுத்த ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி அடைந்து வருகிறேன்.
நம் திறமைகளை வளர்த்துக் கொணடு நமக்கான வருமானத்தை தரும் வகையில் அதை பயன்படுத்தவும் வேண்டும். பெண்கள் தங்களுக்கு வருமானம் ஈட்டும்பொழுது அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் எனவே யாரையும் சார்ந்து இல்லாமல் நம்மை நாமே பார்த்துக் கொள்ளும்போது கிடைக்கும் தன்னம்பிக்கை வேறு எதிலும் கிடைக்காது ..
Https://www.instagram.com/craftsncakes21?utm_source=qr&igsh=NDltazFvbnl4bjNq
வாழ்க்கை என்றால் கடினமாக சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் அந்த நேரத்தில் சோர்ந்து விடாமல் நம் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பயணித்தால் நமக்கு வெற்றியே என்கிறார் தன்னம்பிக்கை நாயகி நதி..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision