ஓயாமரி சுடுகாடு தற்காலிகமாக மூடப்படுகிறது - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண்.15க்குட்பட்ட ஓயாமரி சுடுகாட்டில் உடல்களை எரியுட்டுவதற்காக நவீன தகன மேடைகள் உள்ளன. இந்த தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக (03.06.2024) முதல் (05.06.2024) வரை 3 நாட்களுக்கு உடல்களை எரியுட்ட இயலாது என்பதால் ஓயாமரி சுடுகாடு செயல்படாது என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் மற்றும் கோணக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை தொடர்ந்து செயல்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision