முத்து மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையிலுள்ள சின்ன மிளகு பாறையில் முத்து மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மகா கணபதி ஹோமத்துடன் பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 28ஆம் தேதி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால்குடம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் ஊர்வலம் கோயில் வந்தடைந்தது. பின்னர் ஸ்ரீ கல்யாண விநாயகர், ஸ்ரீ மகாசக்தி முத்துமாரியம்மன் , ஒண்டி கருப்புசாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் முத்து பல்லாக்கு திருவீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது. பின்னர் மதியம் கஞ்சி காய்ச்சி ஊற்றபடும். மாலை 6 மணி அளவில் மாவிளக்கு பூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். இரவில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி உடன் அம்மன் செல்லும். இந்த நிகழ்ச்சிகளை கோவிலில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சுரேஷ், பாலா, ஒண்டிராஜ், ராஜேஷ் மற்றும் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் .